search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து"

    ஆந்திர மாநிலத்தில் விஜயநகரம்-வால்ட்டைர் பிரிவு இடையே புயல் எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதால் இன்று இயக்கப்பட இருந்த சென்னை சென்டிரல்-விசாகப்பட்டினம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டு உள்ளது. #ExpressTrain
    சென்னை:

    ஆந்திர மாநிலத்தில் விஜயநகரம்-வால்ட்டைர் பிரிவு இடையே புயல் எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக நேற்று இயக்கப்பட இருந்த விசாகப்பட்டினம்-சென்னை சென்டிரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22801) ரெயில் ரத்து செய்யப்பட்டது.

    இன்று (சனிக்கிழமை) இயக்கப்பட இருந்த சென்னை சென்டிரல்-விசாகப்பட்டினம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (22801) ரத்து செய்யப்பட்டு உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்பட இருந்த திருவனந்தபுரம் சென்டிரல்-சில்சார் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (12515) மற்றும் கவுகாத்தி-பெங்களூரு கன்டோன்மென்ட் எக்ஸ்பிரஸ் (12510) ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #ExpressTrain
    கனமழை காரணமாக மதுரை வழியாகச்செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. #Expresstrains
    மதுரை:

    கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் மழை பெய்கிறது. இதனால் அந்த பகுதிகளில் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ரெயில் போக்குவரத்து குறித்து மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரி வீராசு வாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவனந்தபுரம் கோட்டத்தில் கனமழை காரணமாக அங்கமாலி, ஆலுவா பாலங்களில் வெள்ள நீர் உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி மும்பையில் இருந்து 14-ந் தேதி புறப்பட்ட ஜெயந்தி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16381), ஈரோடு, திண்டுக்கல், மதுரை வழியாக திருப்பி விடுப்பட்டு கன்னியாகுமரிக்கு செல்லும்.

    இதேபோல் பெங்களூருவில் இருந்து நேற்று புறப்பட்ட ஜலண்டு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16526), சேலம், நாமக்கல், திண்டுக்கல், நெல்லை வழியாக திருப்பி விடப்பட்டு கன்னியாகுமரிக்கு செல்லும்.

    மதுரை கோட்டத்தில் செங்கோட்டை-புனலூர் இடையே மண்சரிவு காரணமாக அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி கொல்லத்தில் இருந்து இன்று (16-ந் தேதி) புறப்படுவதாக இருந்த தாம்பரம் வாரம் மூன்று முறை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 06028) போக்குவரத்தில் கொல்லம்-செங்கோட்டை இடையேயான சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    புனலூரில் இருந்து இன்று (16-ந் தேதி) புறப்படுவதாக இருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 56365/ 56366) போக்குவரத்தில் கொல்லம் புனலூர் இடையிலான சேவை இருமார்க்கங்களிலும் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #Expresstrains

    தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    மதுரை:

    மதுரை ரெயில்வே கோட்ட செய்தி தொடர்பாளர் வீராசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மதுரை கோட்டத்தில் விருதுநகர் பிரிவுக்கு உட்பட்ட கடம்பூர்-வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்திற்கு இடையே நாளை (1-ந் தேதி) தண்ட வாள பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அதன் வழியாக ரெயில்கள் செல்லும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி சென்னை-தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் போக்குவரத்தில் மதுரை- நெல்லை இடையேயான சேவை பகுதி நேரமாக இருமார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.

    திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு புறப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22628) ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 12.50 மணிக்கு கிளம்பும்.

    பாலக்காடு-திருச்செந்தூர் பயணிகள் ரெயில் போக்குவரத்தில் மதுரை-நெல்லை இடையேயான சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் மதுரையில் இருந்து 2 1/2 மணி நேரம் தாமதமாக மாலை 6.30 மணிக்கு புறப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    ×